Blogger :: தளவமைப்பைத் திருத்தவும்

Blogger :: தளவமைப்பைத் திருத்தவும்:

கமல்ராஜ்








ஏங்கும் நினைவுகள்.
...................................
காதல் கொண்ட நாட்களில்  
தூங்கிக் கொண்ட என் கண்கள்  
உன்னைக் காணாத வேளையிலே 
தூக்கம் தேடி அலைகின்றது, 
துக்கம் வந்து சூழ்கின்றது. 

இமைக்காது துடிக்கும் இதயம் 
இடைவிடாது  உன்னை அழைக்கின்றது.   
தூக்கத்தை விற்றுக் கொண்டு 
தொலைதூரத்தில் நான் 
தலையணை வாசம் தேடி.... 

உன்னருகில் உள்ள போது 
வேகமாய் சுற்றிய பூமி - இன்று ஏனோ 
மெதுவாகச் சுழல்கின்றது.  

துப்பட்டா நிழலின் கீழமர்ந்து 
கதை பேசிக் கழித்த காலம் 
வருடங்கள் நிமிடங்கள்தான் 
ஆனால் இன்று...... 
கடந்து சென்ற காலங்களைவிட 
காணத்துடிக்கும் நேரங்கள் அதிகம். 
வாங்கிக் கொள்ளும் கனவில் 
அதிக நேரம் உன் ஆதிக்கம். 

என்றோ ஒரு நாள் 
வரப்போகும் மரணம் ஒழிந்திருக்க 
உன் நினைவில் 
ஒவ்வொரு நொடியும் மரணிக்கின்றேன். 

பிரிந்து சென்ற வேளையில் 
வழியனுப்பிய கண்ணீர்த்துளி 
உப்பு நீராக என்னை 
இடைமறிக்கின்றது அரபுக்கடல். 

கிளிப்பிள்ளை பேசுவதாய்  
கொஞ்சும் தமிழில் 
செல்லமாய் ஒலிக்கும் உந்தன் குரலை 
நினைக்கையில் என் நெஞ்சம் வெடிக்கின்றது.

ஆசை கொண்டு துடித்து 
தொலைபேசித் தொடர்பு வைத்தால் 
பதுங்கும் பூனையாய் 
நடுக்கத்தோடு உந்தன் குரல் 
உறவுகளுக்கு உரிமை கொடுத்துக் கொண்டு..........  

உணவின்றி வாழ்ந்திடுவேன் 
உன் நினைவின்றி முடியவில்லையே...! 

நாளுக்கு நாள் உன் உடல் ஒடுங்குவதாய் 
தபால்காரர் செய்தி 
புரிந்து கொள்கின்றேன் 
என் நினைவுகள் உன்னை வாட்டுதென்று 

காட்சிப் படுத்திய ஓவியங்களாய் 
கண்ணுக்குள்ளே உன் நிழலடி 
நிழலைத் தடவும் அவாவினிலே 
நித்திரையில் நானடி. 

பார்க்கும் திசையெல்லாம் 
காண்கின்றேன் உன் முகத்தை 
கானல் நீராய் அதுவும் 
விரைந்தோடி மறைவதினால்
கவலைகளோடும் கண்ணீரோடும் 
கற்பனை வெள்ளத்தில் 
நீந்த முடியாமல் தின்றுகின்றேன், 
உன்னை நினைக்கும் போதெல்லாம். 

கடலுக்கு குறுக்கே ரோடிருந்தால் 
நடந்து வந்து பார்த்திடுவேன் 
ஆழக் கடல் கண்டு 
அழுது கண்ணீர் துடிக்கின்றேன்.


நிலவொளியில் மரநிழலின் கீழ் 
மறைந்து அமர்ந்தும் 
இரவுகளைப் பகலாகவும் 
பகல்களை இரவாகவும் மாற்றியதும் 
மௌனமாய் காதுகளில் பேசியதும் 
வருகைக்காய் காத்திருக்கும் 
நடந்து சென்ற இடங்களும் 
சந்தோசப் பட்ட தினங்களும், 
நீ சங்கடப்பட்ட ஒரு நாளும், 
கால் பதித்த கடற்கரையோரம், 
ஐஸ் கிறீம் குடித்த கடைகளும், 
கட்டியணைத்து நீ கொடுத்த முத்தங்களும், 
முத்தத்துக்காய் போட்ட சண்டைகளும்,  
அழவைத்துப் பார்த்த பொழுதுகளையும் 
நினைத்துப் பார்க்கையிலே 
உப்பை சொரியும் கண்களில் 
நித்தமும் தீ எரிகின்றது, 
மனமோ.. தீக்குழிக்கின்றது. 

அன்பே...! 
மேலும் எழுதமுடியவில்லை 
மேனியெல்லாம் சிலுக்கின்றது, 
கடந்து சென்ற நினைவுகள் 
காரமுள்ளாய் கிழிக்கின்றது, 
இதுதான் காதல் வலியா? 
என்னைக் கொல்லாமல் கொல்கின்றது.

http://strfm24.com/?p=9189%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E2%80%A6

ஒளியில்லாத நிலவு...



என்ன நடந்ததென்று 
இது வரை எனக்குத் தெரியாது, 
அதிகாலை வேளையிலே 
அழுத குரலோடு 
ஒரு அழைப்பு. 

காதலித்த நாள் முதலாய் 
நீ கண்ணீர் விட்டு பார்த்ததில்லை 
எனக்கும் அழுது பழக்கமில்லை 
எப்படி என்னை அழவைத்தாய்..? 

ஆரம்பிக்கும் இடம் தெரியாமல் 
எங்கிருந்தோ ஆரம்பித்தாய்  
அப்போதே புரிந்து கொண்டேன் 
புன்னகைக்கு மோசமென்று...  

பிரிந்து விடச் சொல்லாமல் 
பிரியச் சொன்னாய்  
பிரியத்தை விடாமல் 
உன் பார்வை படும் இடத்தில் 
வாழச் சொன்னாய் 
எப்படி முடியும் என்னால்..?  

எனக்காக எதையும் செய்யத்தயங்காதவன்  
என்பது எனக்குத் தெரியும் 
அதற்காகவே நான் 
மணவாழ்க்கையை வெறுத்து  
முதிர் கன்னியாகின்றேன் 
முடிந்தவரை 
உன்னோடு வாழ முயற்சிக்கின்றேன் 
என்றாய் 
பேசியது நீ என்பதால் 
என் வார்த்தைகள் மௌனமானது. 

உன்னை தவிக்கவிட்டு 
நான் ரசிப்பேனென நினைத்தாயா..? 
உன்னெதிரே 
வேறு பெண்ணோடு 
வாழ்வேன் என் நினைத்தாயா..?   

உன் வார்த்தை கேட்ட 
நொடி முதலாய் 
அணுவணுவாய் சாகின்றேன்  
என்னையே நான் தேடுகின்றேன். 

வரட்சிக்கால மேட்டு நிலமாய் 
வரண்டு போன  என் கண்களில் 
மழைக்கால ஊற்றாக  
கண்ணீர் 
தடையின்றிக் கசிகின்றது  

இரவு நேரத்தூக்கம் அடம்பிடிக்கின்றது 
உனக்காக இமைகள்  இரண்டும் 
இணையாமல் எங்கோ அலைகின்றது.  
தூக்க மாத்திரைப் போதையிலும் 
தூங்கிக் கொள்ள முடியவில்லை.  

தலையணையோரம் உன் படம் 
என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கின்றது. 
வடிந்து வரும் கண்ணீர்த்துளிகள் 
அதைக் கழுவிச் சொல்கின்றது.  

ஆறு ஆண்டுகளாய் 
திறக்காத கண்களை 
உன் உறவுகள் 
இப்போதுதானா திறந்தார்கள்? 
உள்ளங்கள்  இல்லமல்தான் 
பிறந்தார்களா..? 

காதலைப் 
பிரிக்க்கத் துடிக்கும் அவர்களுக்கு 
மனங்கள் மரத்துப் போனதா..? 

ஒருமித்த மனங்களை 
ஒன்றினைய வைப்பதில் என்ன தப்பு 
அவர்கள்
தேடுகின்ற தகுதியில் 
என்னில் என்ன இல்லை 
கேட்டுச் சொல்லு...........



உன்னைத்தான் எழுதுகின்றேன் வரியாக,
நீயே எந்தன் ஒளியாக,
உயிரைக் கொண்டு வார்த்தைகளை உருக்கி
எடுக்கின்றேன் சிலையாக...

கண்கள் இருண்டு
தூக்கம் வந்தாலும்,
தூங்க முடியாமல்
கண்ணுக்குள்ளே உன் நினைவு,
போர்வை இழுத்துப்
போர்திக் கொண்டால்
மார்புக்குள்ளும்
உன் கனவு.

விட்டு விட்டுத் துடிக்கின்றது இதயம்
உயிருக்குள்ளே நீ நுழைய,
முட்டி முட்டி அழைக்கின்றது இமைகள்,
இருவரும் ஒன்றாய் இணைய....




கவிதையில் தான் காதலென்றால்
காலம் அதை ஏற்காது,
காதலித்தவன் எல்லாம் கவிஞனென்றால்
காவியங்கள் நிலைக்காது.
கை பிடித்து இணைய வந்தால்
கை நழுவிச் செல்கின்றாய்
கற்பனையில் நீ வந்து
கவியாக மலர்கின்றாய்....


கருத்துக்களைப் பதிவு செய்க.

எனது இணைய வாசலுக்கு வருகை தந்த அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

என் இதயப் பூக்களை சாரலாக தூவுகின்றேன் காதல் வரிகளாக...


அவிழ்ந்து போன முடிச்சுக்கள்..... திசை மாறிய தென்றல் கவிதைகளோடு........உங்கள் நண்பன் கமல்ராஜ்.