ஒளியில்லாத நிலவு...



என்ன நடந்ததென்று 
இது வரை எனக்குத் தெரியாது, 
அதிகாலை வேளையிலே 
அழுத குரலோடு 
ஒரு அழைப்பு. 

காதலித்த நாள் முதலாய் 
நீ கண்ணீர் விட்டு பார்த்ததில்லை 
எனக்கும் அழுது பழக்கமில்லை 
எப்படி என்னை அழவைத்தாய்..? 

ஆரம்பிக்கும் இடம் தெரியாமல் 
எங்கிருந்தோ ஆரம்பித்தாய்  
அப்போதே புரிந்து கொண்டேன் 
புன்னகைக்கு மோசமென்று...  

பிரிந்து விடச் சொல்லாமல் 
பிரியச் சொன்னாய்  
பிரியத்தை விடாமல் 
உன் பார்வை படும் இடத்தில் 
வாழச் சொன்னாய் 
எப்படி முடியும் என்னால்..?  

எனக்காக எதையும் செய்யத்தயங்காதவன்  
என்பது எனக்குத் தெரியும் 
அதற்காகவே நான் 
மணவாழ்க்கையை வெறுத்து  
முதிர் கன்னியாகின்றேன் 
முடிந்தவரை 
உன்னோடு வாழ முயற்சிக்கின்றேன் 
என்றாய் 
பேசியது நீ என்பதால் 
என் வார்த்தைகள் மௌனமானது. 

உன்னை தவிக்கவிட்டு 
நான் ரசிப்பேனென நினைத்தாயா..? 
உன்னெதிரே 
வேறு பெண்ணோடு 
வாழ்வேன் என் நினைத்தாயா..?   

உன் வார்த்தை கேட்ட 
நொடி முதலாய் 
அணுவணுவாய் சாகின்றேன்  
என்னையே நான் தேடுகின்றேன். 

வரட்சிக்கால மேட்டு நிலமாய் 
வரண்டு போன  என் கண்களில் 
மழைக்கால ஊற்றாக  
கண்ணீர் 
தடையின்றிக் கசிகின்றது  

இரவு நேரத்தூக்கம் அடம்பிடிக்கின்றது 
உனக்காக இமைகள்  இரண்டும் 
இணையாமல் எங்கோ அலைகின்றது.  
தூக்க மாத்திரைப் போதையிலும் 
தூங்கிக் கொள்ள முடியவில்லை.  

தலையணையோரம் உன் படம் 
என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கின்றது. 
வடிந்து வரும் கண்ணீர்த்துளிகள் 
அதைக் கழுவிச் சொல்கின்றது.  

ஆறு ஆண்டுகளாய் 
திறக்காத கண்களை 
உன் உறவுகள் 
இப்போதுதானா திறந்தார்கள்? 
உள்ளங்கள்  இல்லமல்தான் 
பிறந்தார்களா..? 

காதலைப் 
பிரிக்க்கத் துடிக்கும் அவர்களுக்கு 
மனங்கள் மரத்துப் போனதா..? 

ஒருமித்த மனங்களை 
ஒன்றினைய வைப்பதில் என்ன தப்பு 
அவர்கள்
தேடுகின்ற தகுதியில் 
என்னில் என்ன இல்லை 
கேட்டுச் சொல்லு...........


கருத்துக்களைப் பதிவு செய்க.

எனது இணைய வாசலுக்கு வருகை தந்த அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

என் இதயப் பூக்களை சாரலாக தூவுகின்றேன் காதல் வரிகளாக...


அவிழ்ந்து போன முடிச்சுக்கள்..... திசை மாறிய தென்றல் கவிதைகளோடு........உங்கள் நண்பன் கமல்ராஜ்.